Editorial / 2018 ஏப்ரல் 19 , பி.ப. 05:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன்
“வடக்கு மாகாண முதலமைச்சர் புதியதோர் கட்சியை தொடங்க இருக்கிறாரா அல்லது கொள்கைகயை ஏற்றுக் கொண்ட ஐக்கிய முன்னணியை உருவாக்க இருக்கிறாரா என்ற தெளிவில்லாத சூழ்நிலை உள்ள போதிலும், சரியான கொள்கையை வகுத்து முதலமைச்சர் செயற்படுகின்ற போது, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியும் அவருடன் இணைந்து செயற்படத் தயாராக இருக்கின்றது” என அக் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் நேற்று (18) தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“வடக்கு மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன், இந்தியாவுக்கு புறப்பட முன்பாக தனது கேள்வி பதிலில், தமிழ் மக்கள் விரும்பும் பட்சத்தில் தான் மீண்டும் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடத் தயாராக இருப்பதாக கூறியிருக்கின்றார்.
எதிர்காலத்தில் தமிழ் மக்களுடைய அபிலாசைகளை உரிமைகளை வெற்றி கொள்ள வேண்டுமாக இருந்தால் எமக்கு ஒரு இறுக்கமான கொள்கைப் பற்றும் கொண்ட அமைப்புத் தேவை. ஏற்கனவே தமிழரசுக் கட்சியும் கூட்டமைப்பும் மக்கள் கொடுத்த ஆணையிலிருந்த விலகிச் சென்றிருக்கின்றன. அதன் காரணமாக கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் அவர்கள் பலத்த அடி வாங்கியிருக்கின்றனர்.
இவ்வாறானதொரு சூழ்நிலையில் தமிழ் மக்கள் நீண்டகாலப் போராட்டத்தின் பின்னர் தமது உரிமைகளை பெற்றுக் கொள்ள முடியாத நிலையில், அவர்களது உரிமைகளை அபிலாசைகளை சரியான முறையில் முன்னெடுத்துச் செல்ல அந்தக் கொள்கைகளை ஏற்றுக் கொள்ளக் கூடிய நம்பகத் தன்மை வாய்ந்த கட்சியொன்று முக்கியம். அந்தக் கட்சியென்ற அடிப்படையில் முதல்வர் புதிய கட்சியொன்றைத் தொடங்க இருக்கின்றாரா அல்லது கொள்கையை ஏற்றுக் கொண்ட ஐக்கிய முன்னணியை உருவாக்க விரும்புகின்றாரா என்பது தெளிவில்லாத சூழ்நிலை உள்ளது.
அவ்வாறு சரியானதொரு ஐக்கிய முன்னணி உருவாகும் பட்சத்தில் அதற்கான யாப்பு சரியான கொள்கை திட்டமிடல்கள் சரியான முறையில் உருவாகும் பட்சத்தில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியும் அவ்வாறு இணைந்து செயற்பட தயாராக இருக்கின்றது.
அண்மைக்காலத்தில் நாங்கள் கூட்டமைப்பிலிருந்த வெளியேறியதுக்கு கூட்டமைப்பினர் மக்கள் கொடுத்த ஆணையில் இருந்து விலகியுள்ளனர் என்பதே காரணம். ஆகவே மக்களது ஆணையை எடுத்து அதனை முன்னெடுத்து வெற்றி பெறச் செய்வதற்கும் சரியான கொள்கைகளை முதலமைச்சர் வகுக்கக் கூடிய சூழ்நிலை வருமாக இருந்தால் நிச்சயமாக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி அவர்களுடன் இணைந்து செயற்படுவதற்கு தயாராக இருக்கின்றது” என மேலும் தெரிவித்தார்.
4 minute ago
58 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
58 minute ago
1 hours ago
1 hours ago