Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
எம். றொசாந்த் / 2018 டிசெம்பர் 18 , பி.ப. 12:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ். வடமராட்சி கிழக்கு கேவில் பகுதியில் முதியவர் ஒருவரை கடத்திய இராணுவ சிப்பாய்கள் உட்பட 7 பேரை பொதுமக்கள் மடக்கி பிடிக்க முற்பட்ட வேளை 3 பேர் தப்பி சென்றுள்ள நிலையில் 4 பேரை பொதுமக்கள் மடக்கி பிடித்து, நையப்புடைத்த பின்னர் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இன்று (18) காலை இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
வடமராட்சி கிழக்கு கேவில் முள்ளியானை சேர்ந்த சி.நமசியாவம் என்ற 60 வயது முதியவரை கார் மற்றும் தளபாடங்கள் விற்பனை செய்யும் வாகனத்தில் வந்த 7 பேர் கொண்ட கும்பல் கடத்தி சென்றுள்ளது.
இதனை அவதானித்த அப்பகுதி இளைஞர்கள் கடத்தல்கார்களை சுமார் 10 கிலோ மீற்றர் தூரம் கடத்தி சென்று இயக்கச்சி பகுதியில் வைத்து மடக்கி பிடித்து நையப்புடைத்துள்ளனர்.
இதன்போது சம்பவ இடத்திற்கு வந்த பளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டபோது, கடத்தப்பட்ட முதியவர் தமக்கு பணம் கொடுக்க வேண்டும் எனவும், அதனாலேயே தாம் கடத்தியதாகவும் கடத்தல்கார்கள் கூறியுள்ளனர்.
இதேவேளை கடத்தல்கார்கள் தொடர்பில் விசாரணை நடாத்தியபோது அதில் இருவர் இயக்கச்சி இராணுவ முகாமை சேர்ந்த சிப்பாய்கள் என அடையாளம் காணப்பட்டனர். அதேவேளை இந்தச் சம்பவதில் 3 பேர் தப்பி சென்றுள்ளனர்.
மிகுதி 4 பேரும் பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கடத்தல் சம்பவத்தில் கைதாகியுள்ள இரு இராணுவ சிப்பாய்களையும் கொழும்பில் இருந்து வந்த பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவர் தன்னுடன் அழைத்துச் சென்றே குறித்த முதியரைக் கடத்தியுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
8 hours ago