2025 ஓகஸ்ட் 29, வெள்ளிக்கிழமை

முன்னாள் போராளிகளுக்கு உதவித்தொகை

Editorial   / 2018 ஜனவரி 17 , பி.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.நிதர்ஷன்

புனர்வாழ்வின் பின் தனியார் துறையில் பணியாற்றி வரும் முன்னாள் போராளிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படவுள்ளது. எனவே அதற்கான பதிவுகளை மேற்கொள்ளுமாறு யாழ். மாவட்ட புனர்வாழ்வுக் கிளை அறிவித்துள்ளது.

புனர்வாழ்வு வழங்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்ட முன்னாள் போராளிகளில் தனியார் நிறுவனங்களில் பணியாற்றுவோருக்கு 10 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்க வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டது.

இதற்கமைய உதவித்தொகையை வழங்குவதுக்கான நடவடிக்கைகள் யாழ்.மாவட்டச் செயலகத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பதிவு செய்யப்பட்ட தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் முன்னாள் போராளிகள் இந்த உதவித்தொகைப் பெற முடியும். பணியாற்றும் நிறுவனத்தால் அவர்களுக்கு ஊழியர் சேமலாப நிதித் தொகை செலுத்தப்பட்டிருக்கவேண்டும்.

தகுதியானவர்களுக்கான 10 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை அவர்கள் பணியாற்றும் நிறுவனங்களுக்கு அனுப்பிவைக்கப்படும் என புனர்வாழ்வுக் கிளை தெரிவித்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .