Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
சுப்பிரமணியம் பாஸ்கரன் / 2018 ஜூலை 18 , பி.ப. 06:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுப்ரமணியம் பாஸ்கரன்
முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலவும் வரட்சி காரணமாக, விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் உணவு உற்பத்தியும் வீழ்ச்சியமைந்துள்ளதென, மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலவும் வரட்சியினால், விவசாயச் செய்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும், குடிநீருக்கான தட்டுப்பாடு காணப்படுகின்றது.
இது தொடர்பில், மாவட்ட அரச அதிபரிடம் கேட்டபோது, மாவட்டத்திலுள்ள 6 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் வசிக்கும் 4 ஆயிரத்து 925 குடும்பங்களுக்கான குடிநீர் விநியோக நடவடிக்கைகள், பிரதேச சபைகளின் ஒத்திசைவோடு, பிரதேச செயலகங்கள் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றனவெனக் கூறினார்.
இதற்கான நிதியை, அனர்த்த முகாமைத்துவ அமைச்சினூடாகப் பெற்று, குடிநீர் வழங்கும் செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், பயிர்ச்செய்கையின் போது பாதிக்கப்பட்ட விசவசாயிகளுக்கு, உலருணவு வழங்குகின்ற செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படுகின்றன என்றுக் குறிப்பிட்டார்.
அந்த வகையில், முதற்கடடமாக 6 ஆயிரத்து 824 குடும்பங்களுக்கு, உலர் உணவுகள் விநியோகிக்கப்படுவதாகவும் இரண்டாம் கட்டமாக, 7 ஆயிரத்து 276 குடும்பங்களுக்கான உலருணவுகள் விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.
அதேவேளை, மாவட்டத்தில் காணப்படும் பாரிய நீர்ப்பாசனக் குளங்களான வவுனிக்குளம், முத்துஐயன்கட்டுக்குளம் ஆகியவற்றில், இம்முறை சிறுபோகச் செய்கை மேற்கொள்ளப்படவில்லை என்றும் வரட்சி காரணமாக, இந்தக் குளங்களில் நீர் குறைவாகக் காணப்படுவதால், சிறுபோகச் செய்கையை மேற்கொள்ள முடியாதுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை, மாவட்டத்தில் காணப்படுகின்ற சிறிய நீர்ப்பாசனக் குளங்களின் கீழ், 397.8 ஹெக்டேயர் நிலப்பரப்பில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் ஏனைய உப உணவுச் செய்கை, பழப் பயிர்ச்செய்கை என்பனவும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட மாவட்டச் செயலாளர், இப்பயிர்ச் செய்கைகளும், வரட்சியால் ஓரளவுப் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளதாகக் குறிப்பிட்டார்.
25 Sep 2025
25 Sep 2025
25 Sep 2025
25 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 Sep 2025
25 Sep 2025
25 Sep 2025
25 Sep 2025