Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Editorial / 2018 ஓகஸ்ட் 05 , பி.ப. 04:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு மாவட்டத்தில், 60 அடி விகாரையொன்றையும் விடுதியொன்றையும் அமைப்பதற்கு, தொல்பொருள் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளதென, நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராசா குற்றஞ்சாட்டியுள்ளார்.
தேசிய வீடமைப்பு அதிகார சபையின், செல்வபுரம் மாதிரி வீட்டுத்திட்ட திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், 2013ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்களின் ஊடாக, தமிழர்களின் பூர்வீகக் காணிகள், தொல்பொருளியல் திணைக்களத்தால் கையகப்படுத்துவதற்கு பல சூழ்சிகள் நடைபெற்று வந்தனவெனவும், அண்மையில் 60 அடி உயரமான விகாரை, ஓய்வு மண்டபங்களை நிர்மாணிப்பதற்கு, சம்பந்தப்பட்ட அமைச்சால் அனுமதி வழங்கப்பட்டுள்ளதெனவும் அவர் குறிப்பிட்டார்.
இதன்போது, அமைச்சர் சஜித் பிரேமதாசவை நோக்கி உரையாற்றிய சாந்தி எம்.பி, "இந்த மாவட்டத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் அடாவடித்தனமான வேலைகளை, உங்கள் சக அமைச்சர்களுக்கு தெரிவிக்க வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார்.
அத்துடன், தாங்கள் அரசாங்கத்துக்கு எதிரானவர்கள் அல்லரெனத் தெரிவித்த அவர், இந்தப் போராட்டங்கள் தெற்கில் ஒன்றிணைந்த எதிரணி செய்வது போல, அரசாங்கத்தை வீழ்த்துவதற்கான போராட்டம் அல்லவெனவும் குறிப்பிட்டார்.
இதேவேளை, தமிழர்கள், தங்களுடைய சுயநிர்ணய உரிமையுடன், தனது பூர்வீக இடங்களில் வாழ்வதற்காகத் தான், தாங்கள் இன்றும் அரசாங்கத்துடன் ஒத்துப்போய்க் கொண்டிருப்பதாகவும், அவர் மேலும் தெரிவித்தார்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
2 hours ago
2 hours ago
3 hours ago