Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2018 ஜூன் 10 , பி.ப. 06:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன்
எதிர்வரும் 19ஆம் திகதியன்று, கொழும்பில் இன்னுமொரு கூட்டத்தை கூட்டி, முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெறுகின்ற காணி ஆக்கிரமிப்புகள் மற்றும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்துவது தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கை குறித்துத் தீர்மானிக்கப்படுமென, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களில் தொடங்கிய அத்துமீறிய சட்டவிரோதத் தொழில் நடவடிக்கைகள் குறித்து, அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை மேற்கொண்ட போதிலும், அதில் எவ்வித முன்னேற்றமும் காணப்படாத காரணத்தால், நிர்வாக முடக்கல் போராட்டத்தை நடத்தி இருக்கிறோமெனத் தெரிவித்த அவர், இந்த நிர்வாக முடக்கல் போராட்டம், திருப்பு முனையாகவே அமையுமென்றும் குறிப்பிட்டார்.
மேலும், இங்குள்ள அதிகாரிகள், சட்டத்தைச் சரியான முறையில் நடைமுறைப் படுத்துவார்களாக இருந்தால், இந்தப் பிரச்சினைகளுக்கு, உடன் தீர்வு கிட்டுமெனவும், அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெறுகின்ற காணி ஆக்கிரமிப்புகள் மற்றும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்துவதற்கு, கூட்டமைப்பு பல வழிகளில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றதெனச் சுட்டிக்காட்டிய சுமந்திரன் எம்.பி, இதற்கென செயலணியொன்றும் உருவாக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வாரம் இடம்பெற்ற நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில், இது தொடர்பில் ஆராய்ந்ததாகத் தெரிவித்த அவர், அதேபோன்று எதிர்வரும் 19ஆம் திகதியன்றும், கொழும்பில் இன்னுமொரு கூட்டத்தை நடத்த ஏற்பாடு செய்துள்ளதாகவும் கூறினார்.
அந்தக் கூட்டத்தில் கலந்துரையாடி, அவ்விவகாரம் குறித்த அடுத்தகட்ட நடவடிக்கையை எடுக்கவுள்ளதாக, அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
10 May 2025
10 May 2025