Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஓகஸ்ட் 09 , பி.ப. 04:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுப்ரமணியம் பாஸ்கரன்
முல்லைத்தீவு மாவட்ட மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் ஆராய்வதற்காக, நாளை மறுதினம் ஞாயிற்றுக் கிழமையன்று (12), கடற்தொழில் நீரியல் வளங்கள் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா, முல்லைத்தீவுக்கு விஜயம் செய்யவுள்ளாரென, நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் தடை செய்யப்பட்ட மற்றும் அனுமதியற்ற கடற்றொழில்களால், தமது வாழ்வாதாரத் தொழில், முழுமையாகப் பாதிக்கப்படுவதாகத் தெரிவித்து, முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள், கடந்த 2 ஆம் திகதி முதல் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுந்தனர்.
இச்சம்பவத்தையடுத்து, கடற்தொழில் மற்றும் நீரியல்வளத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஜனக பிரசன்னகுமாரவின் ஏற்பாட்டில், நேற்று (08), எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், கடற்றொழில் நீரியல் வளங்கள் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா ஆகியோரின் பங்குபற்றலுடன், அமைச்சின் செயலத்தில் கலந்துரையாடலொன்று நடைபெறுமென்று அறிவிக்கப்பட்ட போதும், அது நடைபெறவில்லை.
இந்நிலையிலேயே, ஞாயிற்றுக்கிழமையன்று களவிஜயம் செய்யவுள்ள அமைச்சர், மீனவர் பிரச்சினை குறித்து ஆராயவுள்ளாரென, சாந்தி சிறிஸ்கந்தராஜா எம்.பி மேலும் தெரிவித்தார்.
25 Sep 2025
25 Sep 2025
25 Sep 2025
25 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 Sep 2025
25 Sep 2025
25 Sep 2025
25 Sep 2025