Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஏப்ரல் 25 , பி.ப. 04:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எஸ்.நிதர்ஷன்
“வடக்கு மாகாண அமைச்சரவை மீது முன்வைக்கப்பட்டுள்ள மோசடிக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து உண்மை நிலை அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு மாகாண பிரதம செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளதாக” வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்தார்.
வடக்கு மாகாண அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்கள் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக பத்திரிகை ஒன்று அண்மையில் செய்தி வெளியிட்டது.
இந்த விடயம் தொடர்பில் வடமாகாண ஆளுநரிடம் ஊடகவியலாளர்கள் இன்று (25) வினவியபோதே ஆளுநர் இவ்வாறு பதிலளித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“மாகாண அமைச்சர்கள் மீதான மோசடிக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்தி உண்மை நிலை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு பிரதம செயலாளருக்குப் பணித்துள்ளேன். அந்த அமைச்சர்கள் தொடர்பில் தற்போது எதுவுமே கூற முடியாது. விசாரணையின் பின்னரே எந்த முடிவுக்கும் வர முடியும்” என தெரிவித்தார்.
இதேவேளை, மோசடிக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், பிரதம செயலாளர் ஊடாக விசாரணை நடத்துமாறு வடமாகாண முதலமைச்சருக்கு வடமாகாண ஆளுநர் கடந்த 10 ஆம் திகதி கடிதம் அனுப்பியிருந்தார்.
அத்துடன், வடக்கு மாகாண சபையின் முதலாவது அமைச்சரவையில் இடம்பெற்ற அமைச்சர்கள் இருவர் மீது மோசடிக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு, அவர்கள் இருவரும் பதவி விலகி ஓராண்டு நிறைவடைய முன்னர் புதிய அமைச்சரவையின் அமைச்சர்கள் மீது மோசடிக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
41 minute ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
2 hours ago
2 hours ago
3 hours ago