2025 ஜூலை 14, திங்கட்கிழமை

மாற்றுத்திறனாளிகளுக்கான செயற்கை உறுப்பு தொழில்நுட்ப அலுவலகம் திறந்து வைப்பு

Princiya Dixci   / 2015 டிசெம்பர் 04 , மு.ப. 11:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஸீன் ரஸ்மின்

மாற்றுத்திறனாளிகளுக்கான செயற்கை உறுப்பு தொழில்நுட்ப நிறுவனத்தின் அலுவலகம், முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு கைவேலியில் நேற்று வியாழக்கிழமை (03)
திறந்துவைக்கப்பட்டது. 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நர்மளநாதன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு குறித்த அலுவலகத்தை திறந்து வைத்தார்.

அத்துடன், வடமாண சபையின் பிரதி அவைத் தலைவர் அன்ரனி ஜெயநாதன், மாகாண சபை உறுப்பிர் சிவாஜிலிங்கம் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது மாற்றுத்திறனாளிகளின் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வங்கப்பட்டதுடன், வங்கியில் பணம் வைப்புச் செய்த வங்கிப்; புத்தகங்களும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .