2021 ஜூன் 20, ஞாயிற்றுக்கிழமை

முல்லையில் அழிந்த நெற்பயிர் விவரங்கள் திரட்டப்படுகின்றன

Gavitha   / 2015 நவம்பர் 20 , மு.ப. 06:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராசா கிருஸ்ணகுமார்

கடந்த நாட்களில் பெய்த மழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் அழிவடைந்த நெற்பயிர் மற்றும் மேட்டுப்பயிர் செய்கைகள் தொடர்பான விவரங்கள் திரட்டப்படுவதாக முல்லைத்தீவு பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் பொ.அற்புதச்சந்திரன் தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள சகல குளங்களும் நிரம்பி வழிந்ததன் காரணமாக, வயல்நிலங்களில் விதைக்கப்பட்ட நெற் கதிர்கள் அழிவடைந்தன. அத்துடன், மேட்டுநிலப் பயிர்ச்செய்கையும் கடும்மழையினால் அழிவடைந்துள்ளன. இவை தொடர்பான விபரங்கள் திரட்டப்பட்டு வருகின்றன. எதிர்வரும் திங்கட்கிழமை அழிவு விபரங்கள் முழுமையாக வெளியிடமுடியும் எனவும் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .