2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் நடமாடும் சேவை

Gavitha   / 2016 ஓகஸ்ட் 20 , மு.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரியில் இடம்பெற்ற விசேட நடமாடும் சேவையில் வெளிமாவட்டங்களில் வசிக்கும் யாழ். மாவட்ட முஸ்லீம் மக்கள் கலந்துகொண்டனர்.

இச்சேவை யாழ்ப்பாணம், சாவகச்சேரி, வேலணை ஆகிய மூன்று பிரதேச செயலகப் பிரிவுகளையும் உள்ளடக்கியதாக நடைபெறுவதுடன் யாழ். பிரதேச செயலாளர் பொ.தயானந்தன் உடனிருந்து மக்களுக்கு தேவையான சேவைகளை விரைவாக செய்து கொடுக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

இதில் புதிய மீள்குடியேற்றப் பதிவுகள், காணி அற்றோர் காணிகளை கோருவதற்கான பதிவுகள் வீட்டுத்திட்டத்துக்கான பதிவுகள் ஆகியவற்றுடன்  வாழ்வாதார உதவிகளுக்கான பதிவுகள் யாழ் மாநகரசபை அலுவலகத்தின் சோலைவரி மதிப்பீடுகள் மற்றும் வீடமைப்புக்கான அனுமதி தொடர்பிலான பதிவுகளும் இந்நடமாடும் சேவையில் மக்களின் சேவைகளாக அமைந்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X