2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

முஸ்லிம்களின் பிரச்சினைகளை கையாள ஆணைக்குழு வேண்டும்

Princiya Dixci   / 2015 ஒக்டோபர் 21 , மு.ப. 08:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எல்.லாபீர்
 
வட மாகாணத்திலிருந்து 1990ஆம் ஆண்டு இரண்டு மணித்தியாலங்கள் அவகாசத்தில் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் பிரச்சினையை ஆராய்;ந்து, அவர்களுக்கான மீள்குடியேற்றம், நஷ்டஈடு மற்றும் தேவைகளை ஆய்வு செய்வதற்கு ஆணைக்குழு நியமிக்கப்பட வேண்டுமென சமூக ஆர்வலர் எம்.நைஸர் நிஸாம் கோரிக்கை விடுத்தார்.

யாழ்.மன்ப உல்உலும் மதுரஸா மண்டபத்தில் 19ஆம் திகதி நடைபெற்ற தமிழ் - முஸ்லிம் உறவுக்கான அமைப்பின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

'எதிர்வரும் 31ஆம் திகதியுடன் வட மாகாணத்திலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 25 வருடங்கள் முடிவடைகின்றன. கடந்த 24 வருடங்களாக அத்தினத்தை கறுப்பு தினமாக நினைவு கூறி வந்தனர். அரசாங்கமும் அமைச்சர்களும் இந்த மக்களுக்கு நஷ்டஈடு வழங்கவில்லையென்பதுடன், மீள்குடியேறிய மக்களுக்கு உதவிகளும் செய்யவில்லை. அவர்கள் நிம்மதியாக வாழ முடியாத சூழல் காணப்படுகின்றது' என அவர் மேலும் தெரிவித்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .