Janu / 2026 மார்ச் 01 , பி.ப. 04:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய இரண்டு பெண்கள் உள்ளிட்ட 13 பேரை யாழ்ப்பாண தலைமையகப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
போதைப்பொருள் வைத்திருந்தமை மற்றும் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ். நகரில் மருந்தகம் ஒன்றை உடைத்து, இரண்டு இலட்சம் ரூபாய் பணம் மற்றும் கைப்பேசி என்பவற்றைக் கொள்ளையிட்ட ஒருவரும், நெடுங்குளம் பகுதியில் வீடொன்றை உடைத்து நான்கு இலட்சம் ரூபாய் பணத்தைக் கொள்ளையிட்ட இருவருமே இவர்களில் பிரதான சந்தேக நபர்களாவர். இக்கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய மேலும் மூவரைக் கைது செய்யப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை, சட்டவிரோத போதைப்பொருட்களைத் தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் மேலும் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸார், அவர்களை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
நிதர்ஷன் வினோத்
10 minute ago
22 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
22 minute ago
1 hours ago
2 hours ago