Janu / 2026 மே 03 , பி.ப. 05:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணத்தில் நீண்டகாலமாக சூட்சுமமான முறையில் கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த ஆண் , பெண் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையின் போது, சந்தேகநபர்களிடமிருந்து 20 போத்தல் கசிப்பு கைப்பற்றப்பட்டது.
நாயன்மார்க்கட்டு பகுதியை சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இப்பகுதியில் நீண்டகாலமாக இவ்வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கு யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

2 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago