Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2023 நவம்பர் 18 , மு.ப. 10:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம் - திருநெல்வேலி பகுதியில் செயலி மூலம் ஓடும் சாரதி ஒருவர் மீது தரிப்பிட முச்சக்கரவண்டி சாரதிகள் ஒன்றுகூடி அச்சுறுத்தல் விடுத்ததுடன் தாக்குதலும் நடத்தியுள்ளனர்.
குறித்த சம்பவம் பலாலி வீதியில், திருநெல்வேலி பழம் வீதி அருகில் நேற்று (17) இடம்பெற்றுள்ளது.
தாக்குதல் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ய சென்றபோதும் பொலிஸாரும் அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் நடந்ததாக பாதிக்கப்பட்ட சாரதி கவலை வெளியிட்டார்.
முச்சக்கரவண்டி சாரதிகள் அதிக கட்டணம் அறவிட்ட நிலையில் செயலி வழியான முச்சக்கரவண்டி சேவை மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நிலையில் செயலி வழியான முச்சக்கரவண்டி சாரதிகள் அச்சுறுத்தலுக்கும் தாக்குதலுக்கும் உள்ளாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
22 minute ago
37 minute ago
3 hours ago