Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 செப்டெம்பர் 01 , பி.ப. 09:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எஸ்.நிதர்ஷன்
பொதுமக்களுடைய கருத்துக்களை உள்வாங்கி வரவு செலவு திட்டத்தை தயாரிப்பதற்காக மக்களுடைய கருத்துகள், தேவைகளை அறிந்து கொள்வதற்காக நாடாளுமன்ற நிதிக்குழு முதல் தடவையாக யாழ்.மாவட்டத்தில் விடேச கலந்துரையாடலொன்றை நடத்தவுள்ளது. இக்கலந்துரையாடல் மாவட்ட செயலகத்தில் நாளை மறுதினம் இடம்பெறவுள்ளது.
மேற்படி விடயம் தொடர்பாக நாடாளுமன்ற நிதிக்குழுவின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் கருத்துத் தெரிவிக்கையில்,
"நாடாளுமன்றில் நிதிக்குழு, பொதுக்கணக்குகள் குழு, கோப் குழு என 3 குழுக்கள் உள்ளன. இதில், நிதிக்குழு புதிதாக உருவாக்கப்பட்டிருக்கின்றது. இக்குழு வரவு செலவு திட்டத்துக்கு முன்னரும் பின்னருமான நிதி முன்மொழிவுகள் அமுலாக்கம் குறித்து அவதானிப்பதற்கான குழுவாகும்.
இக்குழுவின் தலைவராக நான் இருக்கிறேன். இக்குழு நாடாளுமன்றத்துக்கு உள்ளே கூட்டங்களை நடாத்தினாலும் வெளியே நடாத்தினாலும் அது நாடாளுமன்ற கூட்டங்களாக அமையும்.
இதன்படி முதல்தடவையாக நாடாளுமன்றத்திற்கு வெளியே கூட்டங்களை இக்குழு நடாத்தவுள்ளது. இதன்படி நாளை கண்டி மாவட்டத்தில் கலந்துரையாடல் நடாத்தப்படவுள்ளது. இதைத் தொடர்ந்து நாளை மறுதினம் யாழ். மாவட்ட செயலகத்தில்
இக்கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. தொடர்ந்து மாத்தறை போன்ற இடங்களில் கூட்டங்கள் நடைபெறவுள்ளன.
இக்கூட்டம் ஒரு திறந்த கூட்டமாக நடைபெறவுள்ளது. இதற்கான அழைப்பு பொது அமைப்புக்களுக்கு ஏற்கனவே விடுக்கப்பட்டிருக்கின்றது. இதேபோல் பொதுமக்களும்
இக்கூட்டங்களில் கலந்து கொண்டு வரவு செலவு திட்டத்தில் இடம்பெறவுள்ள தமது தேவைகள் குறித்த கருத்துகளை கூறலாம். ஆலோசனைகளையும் வழங்கலாம். மேலும் இந்த கூட்டத்தில் நிதிக்குழு அங்கத்தவர்கள் மற்றும் நாடாளுமன்ற
உறுப்பினர்கள் உள்ளடங்கிய ஏழு பேர் கலந்து கொள்ளவுள்ளனர். விசேடமாக வரவு செலவு திட்டத்தை தயாரிக்கும் திணைக்களம் சார் அதிகாரிகளும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்வார்கள்" என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .