Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை
Freelancer / 2023 மே 12 , மு.ப. 10:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த்
யாழ்ப்பாணத்தில் நுங்கு திருட்டுக்கள் அதிகரித்துள்ளதாகவும், அதனை கட்டுப்படுத்த உரிய தரப்புக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் காணி உரிமையாளர்கள் கோரியுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் நிலவும் வெப்பமான கால நிலைமை காரணமாக நுங்கு க்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.
அதனால் ஆட்கள் அற்ற தனியார் காணிகளுக்குள் உள்ள பனை மரங்களில் நுங்குகளை குலை குலையாக திருடர்கள் வெட்டி செல்கின்றனர்.
காணிக்குள் விழும் பனம் பழங்கள் ஊடாகவே பனாட்டு செய்கிறோம் , பனம் பழங்களின் விதைகள் கொண்டு , பனம் பாத்தி செய்து அதன் ஊடாகவே பனம் கிழங்கு, ஒடியல் என்பவற்றை பெற்றுக்கொள்கிறோம்.
பனம் பழத்தின் இளம் பதமாக உள்ள நுங்குகளை குலை குலையாக திருடர்கள் வெட்டி செல்வதனால் பனம் பழம் இல்லாது போகிறது. பனம் பழத்தின் ஊடாக பெற்றுக்கொண்ட எமது சிறிய வாழ்வாதாரம் இல்லாமல் போகின்றது. எனவே உரிய தரப்புக்கள் இது தொடர்பில் கவனம் செலுத்தி நுங்கு திருட்டுக்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளனர். (N)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
44 minute ago
59 minute ago
2 hours ago