Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 ஓகஸ்ட் 02 , மு.ப. 10:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த்
பொலிஸாரின் உத்தியோகபூர்வ வாகனங்களுக்கே எரிபொருள் நிரப்புவது எனவும் , அவர்களின் தனிப்பட்ட வாகனங்களுக்கு எரிபொருள் பெற பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஊடாக பிரதேச செயலரின் அனுமதி பெறப்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பொலிஸார் தமது தனிப்பட்ட வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்புவதாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
அது தொடர்பில் பிரதேச செயலர்களால், எந்தெந்த பொலிஸ் நிலையத்தினர் அவ்வாறு நடந்து கொள்கின்றனர் என்ற விவரமும், முன்வைக்கப்பட்டது.
இதனையடுத்து பொலிஸாரின் உத்தியோகபூர்வ வாகனங்களுக்கு மாத்திரம் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் நிரப்புவதற்கு அனுமதிப்பது என்றும், அலுவலகத் தேவைக்கு தமது தனிப்பட்ட வாகனங்களைப் பயன்படுத்தும் பொலிஸாரின் விவரங்களை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஊடாக பிரதேச செயலகத்துக்கு சமர்ப்பித்து, பிரதேச செயலரின் அனுமதி பெற்றே அதற்கு எரிபொருள் நிரப்பலாம் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. (R)
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago