Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Editorial / 2023 ஒக்டோபர் 15 , மு.ப. 10:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
பு.கஜிந்தன், ஹஸ்பர்
பெரும்போக நெல் விதைப்பு காலமானது ஆரம்பித்த நிலையில் மழை பெய்யாமையினால் விவசாயிகள் மிகுந்த கவலையில் காணப்பட்டனர்.
இதனால் விதைப்புகள் பின்தள்ளப்படுமா, விளைச்சல் கிடைக்குமா என்ற அச்சத்தில் விவசாயிகள் காணப்பட்டனர்.
இந்நிலையில், யாழ்ப்பாணத்தில் விதைப்பிற்கு ஏற்ற வகையில் மழை சனிக்கிழமை (14) பெய்துள்ளது. அந்தவகையில் தமது விவசாய நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் செயற்பாடுகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், திருகோணமலை மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு (14) பெய்த கனமழை காரணமாக தம்பலகாமம்,கிண்ணியா போன்ற பகுதிகளில் உள்ள வயல் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன.
தற்போது வயல் விதைப்புக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ள நிலையில் பலத்த மழை காரணமாக முற்றாக வெள்ள நீரில் மூழ்கியுள்ளன.
கிண்ணியா சூரங்கல் கற்குழி உள்ளிட்ட வயல் நிலப்பகுதிகள் மற்றும் தம்பலகாமம் கோயிலடி உள்ளிட்ட பல வயல் நிலங்கள் மூழ்கியுள்ளன. இதனால் விவசாயிகள் வயலை உழுது விதைப்பினை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
16 minute ago
25 minute ago