Freelancer / 2021 டிசெம்பர் 31 , மு.ப. 08:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
என்.ராஜ்
நயினா தீவு வடக்கு பகுதியில் நேற்று மாலை வீசிய மினி சூறாவளி தாக்கத்தினால் ஆறு குடும்பங்களைச் சேர்ந்த 14 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் சூரிய ராஜா இதை தெரிவித்தார்.
யாழ். மாவட்டத்தில் நேற்று காலையிலிருந்து மழையுடன் கூடிய காலநிலை நிலவுகின்ற நிலையில் வேலணை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட நயினாதீவு வடக்கு ஜே 35 கிராம சேவகர் பிரிவில் வீசிய மினி சூறாவளியின் தாக்கத்தினால், ஆறு குடும்பங்களைச் சேர்ந்த 14 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மூன்று வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் சேத விபரங்கள் தொடர்பில் குறித்த பிரதேச செயலகத்தினூடாக விவரங்கள் சேகரிக்கப்பட்டு கொழும்பு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.
3 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago