Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Editorial / 2018 நவம்பர் 25 , பி.ப. 06:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்கு உட்பட்ட பகுதியில், டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துள்ளதாக, யாழ்ப்பாணம் மாநகர சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் அண்மையில் பெய்த அடைமழையால், மாநகர சபை எல்லைக்கு உட்பட்ட பகுதியில், கடந்த ஒக்டோபர் மாதம் மாத்திரம் 10 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டனர்.
இதேவேளை, நவம்பர் மாதம் முதலிரு வாரங்களில் மாத்திரம் 10 பேர் டெங்கு நோயாளர்களாக அடையாளங்காணப்பட்டனர்.
இனிவரும் நாள்களில், டெங்கு நோய் தீவிரமாகப் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதால், டெங்கு நுளம்புகள் பரவக்கூடிய இடங்களை அடையாளங்கண்டு, அவற்றை அழிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, சுகாதாரப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .