2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

யாழ்ப்பாணத்தில் மீண்டும் சோதனை சாவடிகள்

Freelancer   / 2022 நவம்பர் 08 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த் 

யாழ்ப்பாணத்தின் சோதனை சாவடிகளை அமைத்து, வீதி சோதனை நடவடிக்கைகளை இராணுவத்தினர் ஆரம்பித்துள்ளதாகவும், அதற்கு மக்களின் ஒத்துழைப்பு தேவை எனவும் , யாழ்ப்பாண ராணுவ கட்டளை தளபதி மேஜர்  ஜெனரல்  சந்தன விஜயசுந்தர தெரிவித்துள்ளார். 

அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் வியாபாரம் மற்றும் பாவனைகள் அதிகரித்துள்ள நிலையில் அவற்றை கட்டுப்படுத்தும் நோக்குடன் இராணுவத்தினர் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். 

யாழ்ப்பாணத்தின் முக்கிய பகுதிகளில் இராணுவ சோதனை சாவடிகளை அமைத்து , வாகனங்களை பரிசோதிப்பதன் மூலம் போதைப்பொருள் வியாபாரிகள் மற்றும் போதைப்பொருள் பாவனையாளர்களை அடையாளம் கண்டு அவர்களை கைது செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 

போதைப்பொருள் வியாபாரிகள் அல்லது போதைப்பொருள் பாவிப்போர் தொடர்பில் தகவல்கள் தெரிந்தால் , அருகில் உள்ள இராணுவ முகாமுக்கு தகவல்களை தந்து உதவுமாறு மக்களிடம் கோருகிறோம். தகவல்களின் இரகசிய தன்மை பேணப்படும். அதனால் மக்கள் பயமின்றி இராணுவ முகாமில் தெரிவிக்கலாம். 

எமது எதிர்கால சந்ததியினரின் நலன் கருதி சமூகத்தில் இருந்து போதைப்பொருளை ஒழிப்பதற்காகவே , வீதி சோதனை சாவடிகளை இராணுவத்தினர் அமைத்துள்ளனர். அதனால் பொது மக்கள் இராணுவத்தினரின் சோதனை நடவடிக்கைகளுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என கோருகிறோம் என தெரிவித்துள்ளார். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X