Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஏப்ரல் 24 , பி.ப. 04:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.குகன், செந்தூரன் பிரதீபன்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சிகளின் மேதினக் கூட்டங்கள், எதிர்வரும் மே 1ஆம் திகதியன்று, யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளன.
இதற்கமைய, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மேதினக் கூட்டம், வடமராட்சி - மாலு சந்தி மைக்கல் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெறவுள்ளது.
அன்றையதினம் பிற்பகல் 3 மணிக்கு, நெல்லியடி சந்தை முன்றலில் இருந்து ஆரம்பமாகும் மேதினப் பேரணி, பிரதான வீதி வழியாக, மைக்கல் விளையாட்டுக்கழக மைதானத்தைச் சென்றடையும். அதன்பின்னர் அங்கு, மேதினக் கூட்டம் நடைபெறும்.
இதில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.
இதேவேளை, புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் மேதினப் பேரணியும் பொதுக்கூட்டமும், யாழ்ப்பாணம் - புத்தூரில் நடைபெறவுள்ளது.
அன்றையதினம், யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகைதரவுள்ள வாகனப் பேரணிகள், பிற்பகல் 3.30 மணியளவில், பருத்தித்துறை வீதி - ஆவரங்கால் சந்தியில் ஒன்றிணைந்து, பருத்தித்துறை வீதி வழியாக ஊர்வலமாகச் சென்று, புத்தூர் - சுன்னாகம் சந்தியை அடைந்து, அங்கிருந்து புத்தூர் மேற்குக் கலைமதி மைதானத்தைச் அடையவுள்ளன.
அதைத் தொடர்ந்து, மாலை 6 மணியளவில், மேதினப் பொதுக்கூட்டம் இடம்பெறும்.
11 minute ago
22 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
22 minute ago
2 hours ago