2025 மே 21, புதன்கிழமை

யாழ். ஊடகவியலாளர் விசாரணக்கு அழைப்பு

Editorial   / 2018 ஓகஸ்ட் 19 , பி.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த், எஸ்.நிதர்ஷன்

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் முக்கிய சூத்திரதாரியான சுவிஸ் குமாரைத் தப்பிக்க உதவியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை முடிவுற்ற நிலையில், யாழ்ப்பாண ஊடகவியலாளர் ஒருவர், விசாரணைக்காக குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அழைக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இயங்கும் தனியார் தொலைக்காட்சியொன்றின் அலுவலகச் செய்தியாளரான நடராஜா குகராஜா என்பவரே, இவ்வாறு விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார்.

இதற்கமைய, கொழும்பில் அமைந்துள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு, எதிர்வரும் 24ஆம் திகதி காலை 9 மணிக்குச் சமுகமளிக்குமாறு, ஊடகவியலாளருக்கு அனுப்பப்பட்ட அழைப்பில் கோரப்பட்டுள்ளது.

சுவிஸ் குமாரைத் தப்பிக்க உதவிய குற்றச்சாட்டில், வட மாகாண முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் ஏ ஜயசிங்க, உப பொலிஸ் பரிசோதகர் ஸ்ரீ கஜன் ஆகிய பொலிஸ் அதிகாரிகளின் தொலைபேசி உரையாடல் தொடர்பான அறிக்கையின் பிரகாரமே, குறித்த ஊடகவியலாளர் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .