Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 நவம்பர் 28 , பி.ப. 05:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
என்,ராஜ், எம்.றொசாந்த்
இலங்கை போக்குவரத்து சபையின் யாழ்ப்பாண டிப்போ சாரதியை தாக்கியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோரி, ஊழியர்கள் இன்று (28) திடீர் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.
கடந்த புதன்கிழமையன்று, இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ், யாழ்ப்பாணம் வசாவிளான் பகுதியில் வைத்து மோதியதில் மாணவனொருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த விபத்து சம்பவத்தின் போது , இலங்கை போக்குவரத்து சபையின் பஸ் சாரதி மீது அங்கிருந்த சிலர் தாக்குதலை மேற்கொண்டமையால், காயமடைந்த சாரதி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சாரதி மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஏனைய தாக்குதலாளிகளையும் பொலிஸார் கைது செய்ய வேண்டும் எனவும் , தமது பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் கோரியே ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்தினுள் பஸ்களை நுழைய விடாது தடுப்புக்களை போட்டுள்ளமையால், வெளி மாவட்ட பஸ்கள், பஸ் நிலையத்தினுள் நுழைய முடியாமல் வீதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
"எமக்கு பாதுகாப்பு வேண்டும்", "நிர்வாகமே எமது உயிருக்கு யார் உத்தரவாதம்", "தனியார் பேருந்து குழுவின் அராஜகம் ஒழிக" உள்ளிட்ட சுலோகங்கள் அடங்கிய அட்டைகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
திடீரென இன்றைய தினம் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளமையால் , தூர இடங்களுக்கு வேலைக்கு செல்வோர், பொதுமக்கள் என பலரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகினர்
1 hours ago
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
5 hours ago