2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் இடைநிறுத்தம்?

சொர்ணகுமார் சொரூபன்   / 2019 மே 06 , பி.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.விக்னேஸ்வரன், உடன் நடைமுறைக்கு வரும் வகையில் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதியின் செயலாளர் கடிதம் மூலமாக இதனை அறிவித்துள்ளார் என்றும் குறித்த கடிதம் இன்று (06) தொலைநகல் மூலமாக யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் அலுவலகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதென்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதியின் செயலாளரால் கையொப்பம் இடப்பட்ட குறித்த கடிதத்தில், பதவி இடைநிறுத்தல் தொடர்பான காரணங்கள் அல்லது வேறு தகவல்கள் எவையும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .