Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
Editorial / 2023 பெப்ரவரி 10 , பி.ப. 03:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
நிதர்ஷன் வினோத்
தமிழ் மக்களினுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு இதுவரை காலமும் தீர்வு வழங்கப்படாத நிலையிலும் பொருளாதார பின்னடைவு நேரத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டம் இரண்டாவது தடவையாக தேவையில்லை என கூறி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றுக்கு யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அனைத்து தரப்பினருக்கும் அழைப்பு விடுத்துள்ளது.
யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய கேட்போர் கூடத்தில் இன்று (10) பிற்பகல் 3 மணியளவில் இடம் பெற்ற ஊடக சந்திப்பின் பொழுது யாழ்இ பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் குறித்த அழைப்பை விடுத்துள்ளது .
இது குறித்து யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் அழகராசா விஜயகுமார் கருத்து தெரிவிக்கையில்
பொருளாதார பின்னடைவு நேரத்திலும் பெருந்தொகையான பண செலவில் இரண்டாவது தடவையாக செய்யவேண்டிய தேவை ஏன் என கேள்வியெழுப்பினார்.
தேர்தலுக்கு பணம் இல்லை என கூறி சுதந்திர தினத்துக்கு பணத்தை செலவளித்தது ஏன்? என யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றிய உபதலைவர் இ.தர்சன் கேள்வியெழுப்பினார்.
நாளையதினம் (11) கரிநாளாக பிரகடனப்படுத்தப்பட்டு யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்றலில் நண்பகல் 12 மணியளவில் பல்கலைக்கழக மாணவர்கள் பொதுமக்கள் என அனைவரையும் பங்கேற்குமாறு பல்கலைக்கழக மாணவர்களால் அழைப்பு விடுக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
39 minute ago
43 minute ago
56 minute ago