Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Freelancer / 2021 டிசெம்பர் 25 , பி.ப. 02:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த்
யாழில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்று யாழ்.பல்கலைக்கழகத்திற்கு அருகில் உள்ள தமக்கு சொந்தமான காணியில் மருத்துவ கழிவுகளை தீயிட்டு அழித்துள்ளது.
குறித்த காணியை சுற்றி நெருக்கமான குடியிருப்புக்கள் காணப்படுவதுடன், அது மிகுந்த சன நெரிசல்மிக்க பகுதியாகும்.
அங்கு எந்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் இன்றி சாதாரண கழிவுகளை எரியூட்டுவதனை போன்று எரியூட்டியுள்ளனர்.
இது தொடர்பில் யாழ்.மாநகர சபை உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து , அங்கு விரைந்தவர்கள், நிலைமையை பார்வையிட்டு சுகாதார துறையினருக்கு அறிவித்தனர்.
சுகாதார துறையினர் அவ்விடத்திற்கு வந்து ஆதாரங்களை திரட்டியதுடன், வழக்கு தொடரவுள்ளதாகவும் தெரிவித்தனர்.
குறித்த தனியார் வைத்தியசாலை இதற்கு முதலும் பல தடவைகள் குறித்த காணியில் இவ்வாறாக மருத்துவ கழிவுகளை தீ மூட்டி அழித்து வந்த போதும், அது தொடர்பில் அயலவர்கள் உள்ளிட்ட பலர் முறையிட்ட போதிலும், வைத்தியசாலை நிர்வாகி அது தொடர்பில் எவ்வித கரிசனையும் இல்லாதது தொடர்ந்து அந்த காணியில் மருத்துவ கழிவுகளை தீயிட்டு அழிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
38 minute ago
1 hours ago