Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2022 ஒக்டோபர் 21 , பி.ப. 12:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த்
யாழ்.போதனா வைத்தியசாலையினுள் அத்துமீறி உள்நுழைந்த இந்திய இராணுவத்தினரால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட 68 பேரின் 35ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்.போதனா வைத்திய சாலையில் இன்றைய தினம் நடைபெற்றது.
கடந்த 1987ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 21ஆம் மாறும் 22ஆம், திகதிகளில் யாழ். போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி உள் நுழைந்த இந்திய அமைதிப் படையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர்.
அத்தாக்குதல் சம்பவத்தில் வைத்தியசாலையில் கடமையில் இருந்த மூன்று மருத்துவர்கள், இரண்டு தாதியர்கள், மேற்பார்வையாளர் உள்ளிட்ட 21 மருத்துவ சேவையாளர்கள் மற்றும், சிகிச்சை பெற்றுவந்த 47 நோயாளர்கள் என 68 பேர் படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. (R)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
05 May 2025