Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Editorial / 2020 ஜனவரி 23 , பி.ப. 01:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
-என்.ராஜ், எம்.றொசாந்த்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட சிங்கள மாணவியைக் கழுத்தறுத்து கொலை செய்தக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அவரது கணவரை, பெப்ரவரி 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதவான் ஏ.பீற்றர் போல், இன்று (23) உத்தரவிட்டார்.
குறித்த வழக்கு நேற்று (23) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, கொல்லப்பட்ட மாணவியின் தாயாரும் சகோதரியும் மன்றில் முன்னிலையாகி இறப்பு விசாரணையில் சாட்சியமளித்தனர்.
இதன்போது, “எதிரி, எனது மகளை 2017ஆம் ஆண்டு பதிவுத் திருமணம் செய்தததுடன், அவருடன் வாழ்ந்து வந்தார். அண்மைக் காலமாக இருவருக்கும் முரண்பாடுகள் இருந்தன” என்று, மாணவியின் தாயார் சாட்சியமளித்தார்.
இதையடுத்து, சந்தேகநபரை பெப்ரவரி 6ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட நீதவான், அன்றைய தினம் வரை வழக்கை ஒத்திவைத்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago