2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

யாழ். மாவட்டச் செயலாளர் பதவியேற்பு

Editorial   / 2020 பெப்ரவரி 17 , பி.ப. 01:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் புதிய மாவட்டச் செயலாளராக கணபதிப்பிள்ளை மகேசன் தனது கடமைகளை பொறுப்பேற்றார்.

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று காலை 9.30 மணிக்கு அவர் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

மட்டக்களப்பு வாழைச்சேனை, வவுணதீவு மற்றும் செங்கலடி ஆகிய பிரதேச சபைகளின் சிறப்பு ஆணையாளராக பதவி வகித்த அவர், முதன்முறையாக மாவட்டச் செயலாளராக யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

கென்யாவுக்கான இலங்கை தூதரகத்தின் பதில் தூதுவராக பணியாற்றியுள்ளதோடு, உணவு ஊக்குவிப்பு ஆணைக்குழுவின் உறுப்பினராகவும் கணபதிப்பிள்ளை மகேசன் பதவி வகித்திருந்தார்.

இலங்கை நிர்வாக சேவையின் சிறப்புத் தரத்தில் உள்ள கணபதிப்பிள்ளை மகேசன், பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் அமைச்சரவையின் ஒப்புதலுடன் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளராக சேவையாற்றிய நாகலிங்கம் வேதநாயகன் அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X