Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2021 டிசெம்பர் 28 , மு.ப. 11:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
-என்.ராஜ்
யாழ்ப்பாணம் மாவட்டத்தில், இந்து விக்கிரகங்கள் திருடப்படுவதை தடுத்து நிறுத்துமாறு, யாழ். மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியிடம் கோரிக்கை விடுத்ததாக, நல்லை ஆதீன குருமுதல்வர் தெரிவித்தார்.
யாழ். மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி, இன்று (28) காலை, நல்லை ஆதீனத்துடன் சந்தித்து கலந்துரையாடினர். குறித்த சந்திப்பு தொடர்பில் கருத்து தெரிவித்த போதே, நல்லை ஆதீன குரு முதல்வர் இதனை தெரிவித்தார்.
இந்தச் சந்திப்பு குறித்து தொடர்ந்து கருத்துரைத்த அவர், யாழ். மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி, தன்னை இன்று மரியாதை நிமித்தம் சந்தித்தார் எனவும் அவர் புத்தாண்டுக்காக தன்னை வந்து சந்திப்பதாக தெரிவித்திருந்தார் எனவும் கூறினார்.
தற்போதைய யாழ். மாவட் நிலைமை தொடர்பில் விளக்கமாக இராணுவத் தளபதி கேட்டறிந்து கொண்டதாகத் தெரிவித்த அவர், அண்மையில், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இந்து விக்கிரகங்கள் திருடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன எனவும் இதை தடுத்து நிறுத்துமாறு கோரியதாகவும் கூறினார்.
அத்துடன், எதிர்வரும் தைப்பொங்கல் உற்சவத்தை இந்து மக்கள் அனைவரும் சுதந்திரமாக கொண்டாடுவதற்குரிய நடவடிக்கையை முன்னெடுக்கமாறும் கிராமங்களில், கோவில்களில் வழிபாட்டுக்கு இராணுவத்தினரால் இடையூறு ஏற்படாதவாறு செயற்பட வேண்டும் எனவும் கோரியதாக, குருமுதல்வர் தெரிவித்தார்.
குறிப்பாக, இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்குச் சென்று, பொதுமக்கள் தமது வழிபாடுகளையும் மேற்கொள்வதற்குரிய ஏற்பாடுகளைச் செய்து தருமாறும் வலியுறுத்தியதாகத் தெரிவித்தார்.
'எதிர்வரும் புத்தாண்டு நிகழ்வை, பொதுமக்கள் பட்டாசு கொழுத்தி சுதந்திரமாக கொண்டாடுவதற்கு அனுமதி வழங்க வேண்டும்.
'தற்போதைய நிலையில் இனங்களுக்கிடையில் விரிசல் நிலை ஏற்படுகின்ற நிலை காணப்படுகின்றது. இது தொடர்ந்தால் பாரிய பிரச்சினையாக உருவெடுக்கும். 'அதனை நிறுத்துவதற்கு தங்களாலான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்ற ஐந்து கோரிக்கைகளையும் இன்றைய சந்திப்பின் போது நான் எடுத்துரைத்தேன்' என்றார்.
அதற்கு பதில் அளித்த இராணுவ கட்டளைத் தளபதி, இவை தொடர்பில் தான் உரிய நடவடிக்கையை சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்துரையாடி எடுப்பதாகவும் தெரிவித்தார் எனவும், குருமுதல்வர் கூறினார்.
10 minute ago
24 minute ago
35 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
24 minute ago
35 minute ago
46 minute ago