Freelancer / 2022 ஜூலை 25 , மு.ப. 07:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
எரிபொருள் பெறுவதில் உள்ள சிக்கல்கள் காரணமாக யாழ்ப்பாண மாவட்ட தனியார் பேருந்துகள் உள்ளூர் மற்றும் வெளியூரில் இன்றைய தினம் (25) சேவையில் ஈடுபடாதென அறிவிக்கப்பட்டுள்ளது.
யாழ் பிராந்திய கூட்டிணைக்கப்பெற்ற பஸ் கம்பனிகளின் இணைய அலுவலகத்தில் தனியார் பேருந்து சங்கங்களுடன் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலுக்கு பின்னர் யாழ் மாவட்ட செயலாளருடன் கலந்துரையாடிய போதும் எரிபொருளை பெறுவதற்கான முயற்சி தோல்வியிலேயே முடிந்தது.
இந்த நிலையில், இன்றைய தினம் சேவையில் ஈடுபட எரிபொருள் இல்லாததால் முழு தனியார் போக்குவரத்தும் ஸ்தம்பிதமடையும். தூர பேருந்து சேவையும் இடம்பெறாது. பொதுமக்கள் இதனை ஏற்றுக்கொள்ள வேண்டுமென யாழ் மாவட்ட பிராந்திய கூட்டிணைக்கப்பெற்ற பஸ் கம்பனிகளின் இணையத்தின் தலைவர் பொ.கெங்காதரன் தெரிவித்துள்ளார். (a)
11 minute ago
43 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
43 minute ago
1 hours ago
2 hours ago