Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Princiya Dixci / 2021 மார்ச் 24 , பி.ப. 04:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
என்.ராஜ்
கடந்த சில தினங்களில், யாழ்ப்பாணம் மாநகர மேயர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனைச் சந்தித்தவர்கள், அவதானமாக இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் இன்று (24) விசேட அறிவித்தலொன்றை விடுத்துள்ள அவர், கடந்த 20ஆம் திகதியன்று, யாழ்ப்பாணம் - நெல்லியடியில் நடைபெற்ற திருமண வைபவத்தில் கலந்துகொண்ட ஒருவருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த நிகழ்வில் தானும் கலந்துகொண்டிருந்ததாகத் தெரிவித்துள்ளார்.
எனவே, தன்னைத் தானே சுயதனிமைப்படுத்திக் கொண்டுள்ள அதேவேளை, பிசிஆர் பரிசோதனையும் செய்துள்ளதாக, மேயர் அறிவித்துள்ளார்.
எனவே, தன்னோடு இந்தக் காலப் பகுதியில் தொடர்புகொண்டவர்கள் அவதானமாக இருக்குமாறு, அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அத்துடன், இன்றையதினம் நடைபெறவிருந்த மாநகர சபையின் விசேட அமர்வும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக, வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago
6 hours ago