Editorial / 2023 நவம்பர் 14 , மு.ப. 11:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
பு.கஜிந்தன்
யாழ்ப்பாணம் வந்த விமானம், மோசமான காலநிலையால் தரையிறங்க முடியாமல் மீண்டும் சென்னைக்குத் திரும்பியது.
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் நோக்கி திங்கட்கிழமை ( 13) புறப்பட்ட பயணிகள் விமானம், யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் நிலவிய மோசமான காலநிலையால் தரையிறங்க முடியாமல் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் மீண்டும் தரையிறக்கப்பட்டது.
இந்த விமானம் இன்று (14) காலை மீண்டும் யாழ்ப்பாணம் வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விமானத்தில் மொத்தமாக 24 பயணிகள் பயணித்த நிலையில் அவர்களுக்கான மாற்றுப் பயணச்சீட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பயணிகள் அனைவரும் சென்னையில் உள்ள ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர்.
20 Apr 2026
20 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 Apr 2026
20 Apr 2026