2026 ஜனவரி 31, சனிக்கிழமை

யுத்த காலத்தில் மூடப்பட்ட வீதிகள் திறந்து வைக்க நடவடிக்கை

Janu   / 2026 ஜனவரி 29 , மு.ப. 09:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

மன்னார், நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் நீண்ட காலமாக மூடப்பட்டு மக்கள் பாவைனையின்றி காணப்பட்ட வீதி மன்னார் நகர சபையால் செப்பனிடப்பட்டு மக்கள் பாவனைக்காக கையளிக்கப்படவுள்ளது.

1983-1984 ஆண்டு காலப்பகுதி வரை மக்கள் பயன்பாட்டில் இருந்த குறித்த வீதி  நீண்ட காலமாக மக்கள் பயன்பாடு இன்றி மூடப்பட்டு காணப்பட்டது.

குறித்த வீதி மூடப்பட்ட காலப்பகுதியில் இராணுவ சோதனை சாவடி மற்றும் பாஸ் வழங்கும் அலுவலகங்கள் அப்பகுதியில் செயல்பட்டு வந்தது.

அதன் பின்னர் நீதிமன்ற கட்டு காவல் பொருட்கள் சேமிக்கப்பட்டு வந்தது. பயன்படுத்த முடியாமல் காணப்பட்ட குறித்த வீதி மற்றும் அதைச் சூழ உள்ள பகுதிகள் தற்போது நகரசபையால் சுத்தம் செய்யப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X