2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

யாழ். பல்கலை மாணவர்கள் போராட்டம்

George   / 2017 மார்ச் 29 , மு.ப. 06:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.திருச்செந்தூரன், எஸ்.நிதர்ஸன்

யாழ். பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவர்கள், விரிவுரைகளைப் புறக்கணித்து அமைதி போராட்டமொன்றை இன்று முன்னெடுத்து வருகின்றனர்.

கலைப்பீட முதலாம் வருட மாணவர்களக்கு,  நடத்தப்பட்ட வரவேற்பு நிகழ்வின் போது வன்முறையில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கலைப்பீட மாணவர் ஒன்றியத்தலைவர் உள்ளிட்ட 13 பேருக்கு, வகுப்புத் தடை விதிக்கப்பட்டமைக்கு எதிராகவே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

அனைத்து வருட கலைப்பீட மாணவர்களும் வாய்களை துணியால் கட்டி அமைதி வழியாக இப்போராட்டத்தை முன்னெடுத்திருந்ததோடு இந்த போராட்டத்தில் நிர்வாகத்துக்கு எதிராக, “உங்களைப் போன்றவர்களால் தான் தமிழர்களுக்கு விடிவில்லை”, “பாலியல் சேட்டை புரிந்தவருக்கு சம்பளத்துடன் விடுவிப்பு” போன்ற வாசகங்கள் அடங்கிய அட்டைகளை தங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X