2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

யாழ்ப்பாணத்தில் 1,714 அபிவிருத்தி திட்டங்கள்

Niroshini   / 2016 ஜனவரி 31 , மு.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

யாழ். மாவட்டத்தில், இவ்வருடம் சுமார் 11,226.02 மில்லியன் ரூபாய் மதிப்பீட்டு தொகையில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள 1,714 அபிவிருத்தி திட்டங்கள், மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில், யாழ் மாவட்ட செயலகத்தால் முன்வைக்கப்பட்டுள்ளன.

யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் சனிக்கிழமை (30) மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், யாழ். மாவட்ட செயலகத்தின் செயற்திட்ட அதிகாரியினால் இந்த திட்ட அறிக்கை விபரிக்கபட்டது. இந்த அபிவிருத்தி திட்டங்கள் குறித்து, சம்மந்தப்பட்ட துறைசார் அதிகாரிகளினால் மாவட்ட செயலகத்துக்கு அறிக்கை சமர்பிக்கப்பட்டு, அதன் தொகுப்பாக ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அனுமதிக்காக முன்மொழியப்பட்டிருந்தது.

அனைவரது கருத்துக்களையும் தொடர்ந்து கூட்டத்தில், திட்டங்கள்  ஏற்றுக்கொள்ளப்பட்டன.

இதற்கமைய, விவசாயம், சுகாதாரம், கைத்தொழில், வீடமைப்பு, வீதி, வைத்தியசாலைகள், நீர்பாசனம், கிராம அபிவிருத்தி, கல்வி போன்ற துறை சார் அபிவிருத்தி திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

மேலும், கல்வி, சிறுவர் மற்றும் மகளிர் அபிவிருத்தி, மின் விநியோகம், வர்த்தகம் மற்றும் தொழில்துறை, வீடமைப்பு, அனர்த்தமுகாமைத்துவம், போக்குவரத்து உள்ளடங்களான ஏனைய விடயங்கள், அடுத்த கூட்டத்தில் எடுத்துகொள்ளப்படும் என இணைத்தலைமைகளால் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து அடுத்த கூட்டம், எதிர்வரும் 28ஆம் திகதி இடம்பெறும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X