2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

யாழ். மாவட்டத்தில் நெல் உற்பத்தியில் வீழ்ச்சி

Princiya Dixci   / 2016 ஜனவரி 31 , மு.ப. 06:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

- செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இவ்வருடம் காலபோக நெற் செய்கை மூலம் 21,000 மெற்றிக்தொன் நெல் அறுவடை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக மாகாண விவசாயப் பிரதிப் பணிப்பாளர் கிருஸ்ணன் ஸ்ரீபாலசுந்தரம் தெரிவித்தார்.

2015ஆம் ஆண்டு இறுதியில் பெய்த மழைகாரணமாக யாழ். மாவட்டத்தில் சில இடங்களில் பயிர் அழிவு ஏற்பட்டுள்ளது. இதனால் கிடைக்கவேண்டிய நெல் உற்பத்தியில் சற்று மாற்றம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

யாழ். மாவட்டத்தில் 1 ஏக்கருக்குரிய சராசரி விளைச்சல் 2.5 மெற்றிக்தொன் வழமையாக கிடைத்து வந்துள்ளது. எனினும், இவ் வருடம் கிடைக்கவேண்டிய நெல் உற்பத்தியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

மாவட்டத்துக்கு அதிகமான நெல்விளைச்சல் தென்மராட்சிப் பகுதியில் இருந்தே கிடைக்பெறுகின்றது. அதேபோல் வடமராட்சி பிரதேசமும் நெல் உற்பத்தியில் கணிசமான பங்கினை வகிப்பதாக பிரதி பணிப்பாளர் மேலும் கூறினார்

சாதாரணமாக ஒரு சதுர அடிப்பரப்பில் 25 நெற்கதிர்கள் இருக்கவேண்டும். இவ் அளவீடு சரியான பயிர் அடர்த்தியாக கருதப்படுகிறது. ஆனால், கடந்த வருட இறுதியில் ஆறு மணித்தியாலத்துக்குள் கிடைத்த அசாதரண மழையினால் நெற்பயிரின் அடர்த்தியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

ஒரு சதுர அடியில் இருந்து கிடைக்கவேண்டிய நெற்கதிர்களில் அடர்த்தி குறைந்து 10 தொடக்கம் 15ஆக கதிர்களாகக் கிடைத்துள்ளன.

இது சாதாரணமாக கிடைக்கவேண்டிய உற்பத்தியில் ஏற்பட்ட பாதிப்பே தவிர நெற்கதிரில் ஏற்பட்ட பாதிப்பாக கருதமுடியாது எனத் தெரிவித்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X