Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
George / 2015 டிசெம்பர் 11 , மு.ப. 10:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
யுவதியொருவரின் புகைப்படத்தை மார்பிங் செய்து இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யவுள்ளதாக மிரட்டி 30 ஆயிரம் ரூபாய் பணம் கோரிய சந்தேகநபரை எதிர்வரும் 16ஆம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட சாவகச்சேரி நீதவான் ஸ்ரீநிதி நந்தசேகரன், அதற்கு உடந்தையாகவிருந்த 17 வயது பாடசாலை மாணவனை 1 இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீரப் பிணையில் செல்ல அனுமதியளித்தார்.
தென்மராட்சியைச் சேர்ந்த யுவதிக்கும் பருத்தித்துறையைச் சேர்ந்த இளைஞன் ஒருவருக்கும் அலைபேசி மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நேரில் சந்தித்த வேளையில், இளைஞன் யுவதியின் புகைப்படம் ஒன்றை கேட்டுப் பெற்றுள்ளார்.
பெற்றுக்கொண்ட புகைப்புடத்தை மார்பிங் முறையில் ஆபாசமாக இணையத்தில் வெளியிடப் போவதாகவும் அவ்வாறு செய்யாமல் இருக்க தனக்கு 30 ஆயிரம் ரூபாய் பணம் தரவேண்டும் என இளைஞன், யுவதியை மிரட்டியுள்ளார். இது தொடர்பில் யுவதியின் தாயார், கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாடு செய்தனர்.
பணம் தருவதாக இளைஞனுக்கு கூறுமாறு பொலிஸார் யுவதியிடம் கூறினர். இதனையடுத்து, பணத்தைப் பெற்றுக்கொள்வதற்காக பருத்தித்துறையிலுள்ள பஸ் தரப்பிடத்துக்கு மாணவன் ஒருவன் வந்ததுடன்; யுவதியை அழைத்துக் கொண்டு அருகிலுள்ள உணவகத்துக்குச் சென்றுள்ளார்.
பொலிஸாரும் உணவருந்துபவர்கள் போல அங்கு சென்றுள்ளனர். அங்கு ஏற்கெனவே இருந்த இளைஞன், யுவதியிடம் பணத்தைப் பெற்றுக்கொள்ள முனைந்த போது அங்கு நின்ற பொலிஸார், இளைஞன் மற்றும் மாணவன் ஆகியோரைக் கைது செய்தனர்.
இருவரையும் சாவகச்சேரி நீதவான் முன்னிலையில் நேற்று வியாழக்கிழமை (10) ஆஜர்ப்படுத்திய போது, மாணவனுக்கு பரீட்சை இருப்பதால் அவரை பிணையில் செல்வதற்கு நீதவான் அனுமதி வழங்கினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago