Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
எம். றொசாந்த் / 2018 நவம்பர் 05 , பி.ப. 04:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
“தமிழ் தேசிய கூட்டமைப்பு ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு என எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை” என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் புளெட் அமைப்பின் தலைவருமான த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
யாழில் உள்ள தனது இல்லத்தில் இன்று (05) ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தமிழ் தேசிய கூட்டமைப்பு ரணில் அரசுக்கு ஆதரவு கொடுப்போம் என எங்கும் குறிப்பிடவில்லை. தற்போதைய பிரதமர் நியமனம் ஆனது ஜனநாயக அரசியலமைப்புக்கு எதிரான நியமனம் அதனை நாம் எதிர்க்கின்றோம். எனவே தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக கொண்டு வரப்படும் பிரேரணைக்கு நாம் ஆதரவு அளிப்போம். அது ரணிலுக்கான ஆதரவு அல்ல” என தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago