Niroshini / 2021 டிசெம்பர் 07 , மு.ப. 11:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம். றொசாந்த், எஸ்.நிதர்ஷன்
நாடு முழுவதும், கேஸ் வெடிப்பு சம்பவங்கள் தொடர்ச்சியாக பதிவாகி வரும் நிலையில், தமது உயிருக்கு பாதுகாப்பு தேடும் வகையில், லிட்ரோ கேஸ் விநியோகஸ்தர் நிலையத்தை, வேறு இடத்துக்கு மாற்றுமாறு வலியுறுத்தி, யாழ்ப்பாணத்தில்,இன்று (07) காலை, கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் - கொட்டடி பகுதியில் அமைந்துள்ள லிட்ரோ கேஸ் விநியோகஸ்தர் நிலையத்துக்கு முன்பாக, இன்றைய தினம், அப்பிரதேச மக்கள் ஒன்றுகூடி, இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இதன்போது, போராட்டக்காரர்கள், "எமது உயிருக்கு யார் உத்தரவாதம்?", "தற்போதைய தரமற்ற எரிவாயு விநியோகத்துக்கு யார் பொறுப்பு?", "ஏழைகளின் உயிரா, பண பலமா?", "எங்கள் பிள்ளைகளின் உயிருடன் விளையாடாதே", "ஆராக்கியமான சந்ததியாக நாம் வாழ வழி விடு" போன்ற பதாகைகளை ஏந்தியிருந்தனர்.
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025