Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2023 ஒக்டோபர் 23 , பி.ப. 02:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம். றொசாந்த்
சட்டவிரோதமாக பிரான்ஸ் செல்ல முற்பட்ட யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவர் லெபனான் நாட்டில் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். சிறையில் உள்ள தனது கணவரை மீட்டு , நாட்டுக்கு அழைத்து வருமாறு அவரது மனைவி கோரிக்கை விடுத்துள்ளார்.
அது தொடர்பில் தெரியவருவதாவது ,
யாழ்ப்பாணம் கொழும்புத்துறை வசந்தபுரம் பகுதியை சேர்ந்த புவனேஸ்வரன் சயந்தன் எனும் இளைஞன் முகவர் ஒருவரை நம்பி, பிரான்ஸ் செல்வதற்காக பெருந்தொகை பணம் கொடுத்துள்ளார்.
அதனை அடுத்து முகவர் ஒருவர் குறித்த நபரை பல்வேறு நாடுகளுக்கு அழைத்து சென்று இறுதியாக லெபனான் நாட்டின் ஊடாக பிரான்ஸ் செல்ல முற்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டு லெபனான் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
அந்நிலையில் லெபனான் நாட்டு சிறையில் உள்ள தனது கணவரை நாட்டுக்கு அழைத்து வருமாறு அவரது மனைவி பல்வேறு தரப்பினரிடமும் கோரிக்கை விடுத்துள்ளார்.
23 Aug 2025
23 Aug 2025
23 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 Aug 2025
23 Aug 2025
23 Aug 2025