2025 செப்டெம்பர் 08, திங்கட்கிழமை

வடக்கின் சமரில் முன்னிலையில் சென். ஜோன்ஸ்

Shanmugan Murugavel   / 2025 மார்ச் 07 , மு.ப. 12:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


வடக்கின் சமர் என்றழைக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும், சென். ஜோன்ஸ் கல்லூரிக்குமிடையிலான போட்டியானது யாழ். மத்திய கல்லூரியில் வியாழக்கிழமை (06) ஆரம்பமானது.

இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய மத்திய கல்லூரி, அணித்தலைவர் ஜெயச்சந்திரன் அஷ்னாத் (5), குகதாஸ் மாதுளன் (2), லியோனுர்டின் ரன்டியோவிடம் (2) விக்கெட்டுகளைப் பறிகொடுத்து சகல விக்கெட்டுகளையும் இழந்து தமது முதலாவது இனிங்ஸில் 131 ஓட்டங்களையே பெற்றது. அன்டோனிரேஷன் அபிஷேக் 27, ரஞ்சித்குமார் நியூட்டன் 24, சதாகரன் சிமில்டன் 24 ஓட்டங்களைப் பெற்றனர்.

பதிலுக்கு தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் சென். ஜோன்ஸ், முதலாம் நாள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 103 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. றேமன்ட் அனுஷாந் 49, அஷ்னாத் 29, ரன்டியோ 20 ஓட்டங்களைப் பெற்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X