Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
Niroshini / 2021 மே 26 , பி.ப. 01:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
-என்.ராஜ், மு.தமிழ்ச்செல்வன், சுப்பிரமணியம் பாஸ்கரன், செ.கீதாஞ்சன், க. அகரன், எஸ்.றொசேரியன் லெம்பேட்
தற்போது நிலவி வரும் கடும் காற்றுடன் கூடிய வானிலை காரணமாக, வடக்கின் பல பாகங்களிலும் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம்:
இன்று (26) வரையான கடந்த 24 மணிநேரத்தில், யாழ்ப்பாணத்தில் வீசிய கடும் காற்றால், 46 குடும்பங்களைச் சேர்ந்த 172 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த மாவட்ட பிரிவின் உதவிப் பணிப்பாளர் என்.சூரியராஜ் தெரிவித்தார்.
அத்துடன், 42 வீடுகள் வீடுகள் பகுதியளவிலும் இரண்டு வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளன.
மேலும், சிறுமி ஒருவர் உட்பட இருவர் காயமடைந்துள்ளதாகவும், அவர் கூறினார்.
குறிப்பாக, காரைநகர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில், 7 குடும்பங்களைச் சேர்ந்த 25 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும், என்.சூரியராஜ் தெரிவித்தார்.
வேலணை, காரைநகர், சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியிலேயே, அதிகளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்
முல்லைத்தீவு:
முல்லைத்தீவு மாவட்டத்தில், நேற்று (25) வீசிய கடும் காற்றால் நான்கு வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், பல பயன்தரு மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளன.
ஒட்டுசுட்டான், மாங்குளம் கிராமங்களில் உள்ள இரண்டு வீடுகளும், பேராற்று கிராமத்தில் ஒரு வீடும், விசுவமடு - தொட்டியடி பகுதியில் ஒரு வீடும் இவ்வாறு பகுதியளவில் சேதமடைந்துள்ளன என, முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளர் எஸ்.லிங்கேஸ்வரகுமார் தெரிவித்தார்.
அத்துடன், பல இடங்களில் வீசிய கடும் காற்றினால் மரங்கள் மற்றும் விவசாயத் தோட்டங்களுக்கும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன என்றும், அவர் கூறினார்.
மேலும், புதுக்குடியிருப்பு - ஒட்டுசுட்டான் வீதியின் கெருடமடுப் பகுதியில் உள்ள வீதியின் குறுக்கே காஞ்சிரமரம் ஒன்று முறிந்து வீழ்ந்ததில், சில மணி நேரம் அந்தவீதி ஊடான போக்குவரத்து தடைப்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து, குரவில் பகுதியில், தென்னை மரமொன்று முறிந்து மின்சார இணைப்பின் மேல் விழுந்துள்ளது.
கிளிநொச்சி:
கிளிநொச்சி மாவட்டத்தில் வீசிவரும் பலத்த காற்ற காரணமாக, 9 வீடுகள் சேதமடைந்தள்ளதாகவும் அதனால் 9 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் தெரிவித்தார்.
அத்துடன், வீசிய கடும் காற்றால், நேற்று (25), புலோப்பளை பிரதான வீதியில் உள்ள மின்கம்பத்தின் மீது தென்னை மரமொன்று முறிந்து வீழந்துள்ளது.
இதனால், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட அறத்திநகர், அல்லிப்பளை, புலோப்பளை கிழக்கு, மேற்கு, அரசன்குடியிருப்பு ஆகிய கிராமங்களுக்குரிய மின்சார இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.
அத்துடன், முரசுமோட்டை பிரதேச பைக்குட்பட்ட தர்மபுரம் பொதுச் சந்தையன்; கூரை, காற்றால் முற்றுமுழுதாக தூக்கி வீசப்பட்ட நிலையில் காணப்படுகிறது.
வவுனியா:
வவுனியாவின் பல்வேறு பகுதிகளில், நேற்று (25); கடும் காற்று வீசியதன் காரணமாக, நெடுங்கேணி - ஒலுமடு பகுதியில், விவசாயி ஒருவரால் செய்கை பண்ணப்பட்டிருந்த 600க்;கும் மேற்ப்பட்ட பப்பாசி செய்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கடும் காற்றால், வவுனியா காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம் மேற்கொள்ளும் பகுதியில், நேற்று முன்தினம் (25), பாரிய மரக்கிளை ஒன்று முறிந்து விழுந்துள்ளது.
போராட்டப் பந்தலில் சிலர் இருந்த நிலையில், அதிர்ஸ்டவசமாக எவருக்கும் சேதங்கள் ஏற்படவில்லை.
மன்னார்:
மன்னார் மாவட்டத்தில் 16 குடும்பங்களைச் சேர்ந்த 59 பேர்; பாதிக்கப்பட்டுள்ளதாக, மன்னார் மாவட்ட அனார்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் கணகரட்னம் திலீபன் தெரிவித்தார்.
மேலும் மாவட்டத்தில் 13 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ள அதேவேளை, 2 சிறிய கடைகளும் சேதமடைந்துள்ளன.
இதேவேளை, மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் பயி;களும் அழிவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும், நேற்று (25) கடும் காற்றுடன் கூடிய கடல் கொந்தழிப்பின் காரணமாக, மீனவர்களின் வாடிகள் தூக்கி வீசப்பட்டதுடன், படகுகள் மற்றும் மீன்பிடி வலைகளும் சேதமாகியுள்ளன.
சௌத்பார், தாழ்வுபாடு, ஓலைத்தொடுவாய், வங்காலை அச்சங்குளம், அரிப்பு உள்ளிட்ட பல மீனவக் கிராம கடல் பகுதிகளில், தொடர்ந்து அதிவேக காற்று மற்றும் கடல் கொந்தழிப்பு காணப்படுவதால், கடல் நீர் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குள்ளும் புகுந்துள்ளது.
அதேநேரம், மன்னார் - சௌத்பார் பகுதியில் உள்ள கடற்படை முகாமும் சேதமடைந்துள்ளது.
இந்நிலையில், கடும் காற்றால் ஏற்பட்ட சேத விவரங்கள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள பிரதேச செயலாளர்கள் ஊடாக சேகரிக்கப்பட்டு, இடர் அனர்தத் முகாமைத்துவ பிரிவுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
16 minute ago
42 minute ago