2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

வடக்கு மாகாண சபைக்கு பலத்த பாதுகாப்பு

Editorial   / 2019 ஏப்ரல் 24 , பி.ப. 01:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ். நிதர்ஷன், எம்.றொசாந்த்

 

இலங்கையில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை அடுத்து, நாட்டில் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டு வரும் நிலையில், வடக்கு மாகாண சபைக்கும், இன்று (24) இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு, மட்டக்களப்பு போன்ற இடங்களில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்களையடுத்து, நாட்டில் பல பாகங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், வடக்கில் உள்ள தேவாலயங்கள், பிரசித்தி பெற்ற இடங்கள், முக்கிய இடங்களுக்குப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில், வடக்கு மாகாண சபை வளாகத்தில், இன்று ​(24), இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தனர்.

யாழ்ப்பாணம் - கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண சபை வளாகத்தில், பல திணைக்களங்களும் மாகாண அமைச்சுகளின் அலுவலகங்களும் அமைந்துள்ளன. இவற்றுக்கு மக்கள் நாளாந்தம் வருகை தந்து சேவைகளை பெற்று செல்கின்றனர்.

அத்துடன், வடக்கு மாகாண முதலமைச்சர் அமைச்சு அலுவலகத்தில், பிரதி புதன்கிழமை தோறும் வடக்கு மாகான ஆளுநர் சுரேன் ராகவன் தலைமையில், பொதுமக்கள் சந்திப்பும் இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில், நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக குறித்த பொதுமகள் சந்திப்பு இரத்து செய்யப்பட்டுள்ளதுடன், வடக்கு மாகாண வளாகத்தைச் சூழ இராணுவத்தினர் களமிறக்கப்பட்டு பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .