2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

வடமராட்சியில் இரு விபத்துக்கள்: சிறுவன் உயிரிழப்பு

Freelancer   / 2022 ஜூன் 04 , மு.ப. 07:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமராட்சி பகுதியில் இடம்பெற்ற இருவேறு விபத்து சம்பவங்களில் பாடசாலை மாணவன் உயிரிழந்துள்ளதோடு, நால்வர்  படுகாயமடைந்துள்ளனர்.

வடமராட்சி, மண்டான் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சிறுவர்கள் இருவர் மோட்டார் சைக்கிளை செலுத்திய நிலையில், குறித்த  மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து மதில் சுவர் ஒன்றுடன் மோதுண்டத்தில் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்றுமொரு சிறுவன் காயமடைந்துள்ளார்.

இதேவேளை, வடமராட்சி, குஞ்சர்கடை சந்திக்கும் புறப்பொறுக்கிக்கும் இடைப்பட்ட பகுதியில் கண்டர் ரக வாகனமொன்றுடன் மோட்டார்சைக்கிள் மோதுண்டத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மூவர் படுகாயமடைந்துள்ளனர். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X