2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

வடமாகாணசபை உறுப்பினர்கள் வவுனியாவுக்கு விஜயம்

Editorial   / 2018 ஒக்டோபர் 09 , பி.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.நிதர்ஷன்

வவுனியா மாவட்டத்தின் மீள்குடியேற்றம், காணி அபகரிப்புக்கள் தொடர்பில் ஆராய்வதுக்காக வடக்கு மாகாண சபையின் உறுப்பினர்கள் குழுவொன்று எதிர்வரும் 17 ஆம் திகதி வவுனியாவுக்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக மாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் இன்று (09) தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண சபையின் கடந்த 133 ஆவது அமர்வின் போது சபையின் வவுனியா மாவட்ட உறுப்பினரான ஜீ.ரீ.லிங்கநாதன் வவுனியாவில் வனலாகாவினரின் அடாவடிகள் தொடர்பில் சுட்டிக்காட்டி இந்த விடயத்தில் சபை விசேட கவனமெடுத்து கள விஐயமொன்றை மேற்கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொண்டார் கொண்டார்.

இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து கால நேரத்தை பின்னர் அறிவிப்பதாக அன்றையதினமே அவைத் தலைவர் சபையில் தெரிவித்திருந்தார். இந் நிலையில் இந்த விடயம் அவைத் தலைவரிடம் வினவியபோது போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .