Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஓகஸ்ட் 09 , பி.ப. 04:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த்
தெல்லிப்பளை வைத்தியசாலையில் நிலவும் வைத்தியப் பற்றாக்குறையை வலியுறுத்தியும் அதற்கான நடவடிக்கைகள் இதுவரை எடுக்கப்படாமைக்குக் கண்டனம் தெரிவித்தும், இன்றைய தினம் (10), பணிப்பகிஸ்கரிப்புப் போராட்டத்தை நடத்த, வடக்கு மாகாண அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.
இது தொடர்பில், ஊடகங்களுக்கு அறிக்கையொன்றை அனுப்பியுள்ள அச்சங்கம், இந்தப் பணிப்பகிஸ்கரிப்புப் போராட்டமானது, யாழ். போதனா வைத்தியசாலை நீங்கலாக, யாழ். மாவட்டச் சுகாதாரச் சேவைகள் பிராந்தியத்துக்கு உட்பட்ட அனைத்து வைத்தியசாலைகளிலும் முன்னெடுக்கப்படுமெனக் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, கடந்த 2015ஆம் ஆண்டு வரையான இடமாற்றத்தை அமுல்படுத்தல் மற்றும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் மருத்துவ அத்தியட்சகர் வைத்திய கலாநிதி குகதாசனுக்கு எதிராக உடனடியாக விசாரணைகளை ஆரம்பித்து, அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தியுமே, இந்தப் பணிப்பகிஸ்கரிப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக, சங்கம் தெரிவித்தது.
தமது போராட்டத்துக்கு, உரிய பலன் கிடைக்காவிட்டால், மேலதிக நடவடிக்கைளை எடுப்பதற்குத் தீர்மானித்துள்ளதாகவும், வடமாகாண அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பில், சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
'தெல்லிப்பளை வைத்தியசாலையின் புற்றுநோய்ப் பிரிவிலேயே, வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த அனைவருக்குமான சேவைகளை வழங்கி வருகின்றது. இந்நிலையில், குறித்த வைத்தியசாலையில் 18 வைத்தியர்கள் சேவையாற்ற வேண்டுமென்ற போதிலும், 9 வைத்தியர்களே பணியாற்றி வருகின்றனர். அங்கு நீண்ட காலம் சேவையில் உள்ளவர்களுக்கு, உரிய காலப்பகுதிக்குள் இடமாற்றம் வழங்கப்படுவதில்லை.
'இதனால் இங்கு இவைத்தியர்கள் பற்றாக்குறை நீண்டகாலமாக நிலவி வருகின்றது. இது தொடர்பில்இ உரிய அதிகாரிகளுக்கும் அமைச்சுக்கும் அறிவித்துள்ள போதிலும்இ இதுவரை ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இருப்பினும், இதுவரை நோயாளர்களுக்கு எந்தவிதமான பாதிப்புகளும் ஏற்படாதவாறு, அங்குள்ள சொற்ப வைத்தியர்களால் சேவை வழங்கப்படுகின்றது.
'இந்நிலையில்இ 2015ஆம் ஆண்டு வரையான வைத்தியர்களை இடமாற்றம் செய்யுமாறு, வைத்தியசாலைப் பணிப்பாளர்கள் மற்றும் மருத்துவ அத்தியட்சகர்களுக்குஇ மத்திய சுகாதார அமைச்சின் செயலாளரினால், சுற்றறிக்கை ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
'அந்த வகையில், தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலைக்கு, யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் கிளிநொச்சி வைத்தியசாலையில் இருந்து வர வேண்டியவர்களை விடுவிக்க, அவ்வைத்தியசாலைப் பொறுப்பதிகாரிகள் இணங்கியுள்ளனர். இருப்பினும், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் அத்தியட்சகர் வைத்திய கலாநிதி குகதாசன் மட்டும், அங்குள்ள வைத்தியர்களுக்குப் பிரதியீடாக வைத்தியர்கள் வழங்கிய பின்னரும், இடமாற்றம் பெறும் வைத்தியர்களை விடுவிக்க மறுப்பு தெரிவிக்கின்றார்.
'இது சம்பந்தமாக, மாகாணச் சுகாதார அமைச்சரும், தமது கருத்துகளைச் செவிமடுப்பதில்லை எனவும் இது தொடர்பில், பொதுச் சேவைகள் ஆணைக்குழுவுக்கும் வடமாகாண சுகாதாரப் பணிப்பாளர் ஊடாக மத்திய சுகாதார அமைச்சுக்கும் அறிவித்துள்ளோம்' என்றும், அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
25 Sep 2025
25 Sep 2025
25 Sep 2025
25 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 Sep 2025
25 Sep 2025
25 Sep 2025
25 Sep 2025