2026 மார்ச் 06, வெள்ளிக்கிழமை

வட்டிக்கு பணம் வழங்கும் நாடுகளில் சீனா முன்னிலை

Freelancer   / 2023 செப்டெம்பர் 23 , பி.ப. 08:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

வட மாகாண சபை அவைத தலைவர் சி.வி.கே. சிவஞானத்தின் ஊடக சந்திப்பு யாழ்ப்பாணம் ஊடாக அமையத்தில் இன்று இடம்பெற்றது.

இதன்போது அவர் கருத்து தெரிவிக்கையில்,

உலகில் சீனா குறைந்த பணத்தை கூடுதல் வட்டிக்கு வழங்கும் நாடாக திகழ்கின்ற நிலையில் தனது அடி மடியில் கை வைக்காத நிலையில் சீனா நடந்து கொள்கிறது.

 நாங்கள் அறிந்த வரையில் முன்னர் ஆப்கான்காரர்களே குறைந்த பணத்தை கூடுதல் வட்டிக்கு கொடுப்பவர்களாக அறிந்திருக்கிறோம்.

ஆனால் இந்நிலை மாறி சீனா தற்போது உலகில் குறைந்த பணத்தை கூடிய வட்டிக்கு கொடுக்கும் நாடாக மாறி வருகிறது.

இலங்கைக்கு கடன் வழங்கிய நாடுகளில் சீனாவே அதிக கடன்களை வழங்கியுள்ள நிலையில் தான் வழங்கிய கடனை எந்த வழியிலும் சீனா மீளப்பெறுவது நிச்சயம்.

சர்வதேச நாணய நிதியம் சீனா இலங்கைக்கு வழங்கிய கடன் தொடர்பில் சரியான பொறிமுறை ஒன்றை ஏற்படுத்துமாறு கூறி வரும் நிலையில் இதுவரை அவ்வாறு நடந்ததாக தெரியவில்லை.

நாங்கள் ஒன்றை கூறுகிறோம், இலங்கையில் இடம் பெற்ற மனித உரிமை மீறல்களுக்கு சரியான பொறிமுறை ஏற்படுத்தப்படாத நிலையில் இதனை காரணமாக வைத்து கடன் வழங்குவது தொடர்பில் ஐ.எம்.எஸ் பரிசீலனை செய்ய வேண்டும்.

ஆகவே சீனாவிடம் இலங்கை பெற்ற கடனை எந்த வழியிலும்  சீனா மீளப் பெறுமே தவிர கொடுத்த கடனுக்காக தனது அடிமடியில் கை வைக்க விடாது என்றார். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .